Sunday, October 28, 2007

தமிழச்சிக்குப் பிறந்தநாளு

தங்கத் தலைவி தமிழச்சி வாழ்க
எங்கள் தலைவி தமிழச்சி வாழ்க

தலித்துக்கள் வாழத் தளராத தலைவி வாழ்க
சலித்திடாத அவர் சாதனைகள் செய்து வாழ்க

பெரியார் கருத்துப் புரட்சித் தலைவி வாழ்க
அறியார் அவர்கருத் தென்றாலு மினிது வாழ்க

புலியை முறத்தால் விரட்டும் புதுயுகத் தமிழச்சி வாழ்க
எலிகளாய் அவர்களை ஓட விரட்டிய தலைவி வாழ்க

புகைப்படம் ஒளிப்படம் நகர்படம் போட்டு வாழ்க
நகைப்பிடம் எனப்படும் நாடகப் புனிதை வாழ்க

விளங்காதவையும் விளங்கி அவர் வாழ்கவாழ்க
இளங்காளை தமிழச்சி தாசருமினிது வாழ்க.

+/-ஞானமேகம்

3 comments:

kiddy ppl said...

தோழர் பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி.ஆனால் நான் பிறந்தநாள் கெதண்டாடுவதில்லை. அதிலும் தங்கத் தலைவி, இனமானத் தாரகை போன்ற பட்டங்கள் வேண்டாம்.
சக தோழராக பாவித்தால் போதும். புகழ்ச்சி வார்த்தைகளும், பட்டப்பெயர்களும் ஏதோ அரசியல்வாதியைப் போல் நினைக்க வைக்கிறது. என்னுடைய கருத்தை சொன்னேன். நீங்கள் தவறாக எண்ணாதீர்கள்.

நன்றி

kiddy ppl said...

//நகைப்பிடம் எனப்படும் நாடகப் புனிதை வாழ்க

விளங்காதவையும் விளங்கி அவர் வாழ்கவாழ்க
இளங்காளை தமிழச்சி தாசருமினிது வாழ்க.//

????????????????????

+/-ஞானமேகம் said...

கருத்திற் கருத்தின்மையுங்
கருத்தின்மையிற் கருத்தும்...

அல்லது

நட்புணர்வில் நக்கலும்
நக்கலில் நட்புணர்வும்