Monday, October 29, 2007

மதியக்காக்குப் பொறந்தநாளு

புங்குடு தீவிற் பிறந்தவரே
புகலிடம் வரையில் நடந்தவரே
இந்தியத் ஈழத் தமிழ்கலந்து
இனியநற் பதிவுகள் இடுபவரே

தமிழ் வலையுலகின் தலைமகளே
தலைமறை வாகிப் போனவரே
கருத்துக்கள் கூறும் கலைமகளே
கவிழ்த்தவர் உமையார் சொல்லுங்கள்

தமிழ்மண முங்களை எறிஞ்சிட்டோ
தலைக்கனம் உங்களை எறிஞ்சிட்டோ
வருபவர் குறைஞ்சு வனப்பிழந்து
வாடிக் கிடக்கோ பதிவெல்லாம்

தாமே உலகம் எனநினைத்தோர்
தரணியில் நிலைத்தது கிடையாது
நாமே புரிஞ்சு நடக்காட்டால்
நாயும் மதிக்கா நிலைதாமே

கோபம் குளத்தோ டென்றிட்டால்
குறையா ருக்கெனச் சொல்லுங்கள்
நாமும் சொல்லி வராவிடால்
நாளை மறந்திடுஞ் செல்லுங்கள்

கோபம் நேசம் கதையெல்லாம்
குழந்தைப் பிள்ளை விளையாட்டு
பாவம் போதும் பரிதாபம்
பதிவிட மீண்டும் வாருங்கள்

வாழிய வாழிய பல்லாண்டு
வலைமகுடம் நீ வாழியவே

No comments: