Monday, October 29, 2007

தீவு தந்த வரவேற்புக்கு நன்றி

உள்குத் தென்ன உள்குத்து
உலக்கைக் குத்துங் கண்டவர்கள்
கல்குத்(து) தென்றும் பார்க்காமல்
கடற்கரை வயற்கரை நடந்தவர்கள்

முள்குத் துவதுந் தெரியாமல்
முழுசாய் மீனைத் தின்றவர்கள்
கள்ளுக்காகப் பனை தென்னை
கடற்கரை மணலிற் கசிப்பண்ணை

பல்குத் தப்பனை தென்னீர்க்கு
பழகுவதற்கோ பனங் கொட்டை
நல்வர வெனக்குச் சொன்னீர்கள்
நன்றி நன்றி தீவாரே

+/- ஞானமேகம்

மதியக்காக்குப் பொறந்தநாளு

புங்குடு தீவிற் பிறந்தவரே
புகலிடம் வரையில் நடந்தவரே
இந்தியத் ஈழத் தமிழ்கலந்து
இனியநற் பதிவுகள் இடுபவரே

தமிழ் வலையுலகின் தலைமகளே
தலைமறை வாகிப் போனவரே
கருத்துக்கள் கூறும் கலைமகளே
கவிழ்த்தவர் உமையார் சொல்லுங்கள்

தமிழ்மண முங்களை எறிஞ்சிட்டோ
தலைக்கனம் உங்களை எறிஞ்சிட்டோ
வருபவர் குறைஞ்சு வனப்பிழந்து
வாடிக் கிடக்கோ பதிவெல்லாம்

தாமே உலகம் எனநினைத்தோர்
தரணியில் நிலைத்தது கிடையாது
நாமே புரிஞ்சு நடக்காட்டால்
நாயும் மதிக்கா நிலைதாமே

கோபம் குளத்தோ டென்றிட்டால்
குறையா ருக்கெனச் சொல்லுங்கள்
நாமும் சொல்லி வராவிடால்
நாளை மறந்திடுஞ் செல்லுங்கள்

கோபம் நேசம் கதையெல்லாம்
குழந்தைப் பிள்ளை விளையாட்டு
பாவம் போதும் பரிதாபம்
பதிவிட மீண்டும் வாருங்கள்

வாழிய வாழிய பல்லாண்டு
வலைமகுடம் நீ வாழியவே

Sunday, October 28, 2007

தமிழச்சிக்குப் பிறந்தநாளு

தங்கத் தலைவி தமிழச்சி வாழ்க
எங்கள் தலைவி தமிழச்சி வாழ்க

தலித்துக்கள் வாழத் தளராத தலைவி வாழ்க
சலித்திடாத அவர் சாதனைகள் செய்து வாழ்க

பெரியார் கருத்துப் புரட்சித் தலைவி வாழ்க
அறியார் அவர்கருத் தென்றாலு மினிது வாழ்க

புலியை முறத்தால் விரட்டும் புதுயுகத் தமிழச்சி வாழ்க
எலிகளாய் அவர்களை ஓட விரட்டிய தலைவி வாழ்க

புகைப்படம் ஒளிப்படம் நகர்படம் போட்டு வாழ்க
நகைப்பிடம் எனப்படும் நாடகப் புனிதை வாழ்க

விளங்காதவையும் விளங்கி அவர் வாழ்கவாழ்க
இளங்காளை தமிழச்சி தாசருமினிது வாழ்க.

+/-ஞானமேகம்

தமிழ்மணமே...!

மானத் தமிழர் மறத்தமிழர்
கேணத் தமிழர் கிறுக்கர்கள்

யாரும் எழுதத் தமிழ்நாறும்
போரும் நடக்கும் புதிர்நீயே

வாழியவெனவே உனை வாழ்த்தி
ஆழிசூழ் உலகினன் யான்வந்தேன்

ஞானக் கிறுக்கையும் இணையுங்கள்
வேணாம் வீணாய்த் தாமதங்கள்.

அறிமுகம்

காளமேகம் ஈழமேகம் கண்டவர்க்குப் புதியதாக
ஞானமேகம் வந்திருக்கிறேன் - ஐயா
ஞானமேகம் வந்திருக்கிறேன்.